நயினாதீவில் வெசாக் கொண்டாடுவதுடன் யாழ்ப்பாணம் - குறிகட்டுவான் பாதையை சீர் செய்யுங்கள்..! இராஜாங்க அமைச்சரிடம் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
நயினாதீவில் வெசாக் கொண்டாடுவதுடன் யாழ்ப்பாணம் - குறிகட்டுவான் பாதையை சீர் செய்யுங்கள்..! இராஜாங்க அமைச்சரிடம் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை கோரிக்கை..

யாழ்ப்பாணம் - குறிகட்டுவான் பாதையை சீரமைக்கும்படி பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை நிதி மூலதன மற்றும் சந்தை, அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு அமைச்சின் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

யாழ்.பல்கலைகழகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோதே அமைச்சரிடம் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இதன்போது மேலும் அவர் கூறுகையில், யாழ்.பல்கலைக்கழகத்தின் வளாகங்களில் 

சில கட்டிட தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளது. குறிப்பாக பொறியியல் பீடம் மற்றும் சித்த மருத்துவபீடம் மற்றும் மருத்துவபீடத்தில் சில கட்டிட தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது. அத்தோடு அதற்குரிய பெருமளவு நிதி முதலீடுகளும் தேவைப்படுகின்றது. 

அதனை மிக விரைவில் பெற்றுத் தர வேண்டும் எனத் தெரிவித்ததோடு குறிப்பாக இம்முறை வெசாக்தினமானது யாழ்.நயினாதீவிலுள்ள நாக விகாரையில் கொண்டாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் யாழிலிருந்து குறிகாட்டுவான் வரையான பாதை 

மிகவும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. நீண்ட காலமாக குறித்த பாதையினை சுற்றுலா பயணிகளும் தென்னிலங்கை மக்களும் பயன்படுத்தும் நிலையில் குறித்த விதியானது சீர் செய்யப்படாத நிலை காணப்படுகின்றது. 

அதேபோல காரைநகர் - யாழ்ப்பாணம் பாதையும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்துகின்ற பாதையானது சீரமைக்கப்படாமை மிகவும் வருத்தம் அளிக்கின்றது. அத்தோடு குடா நாட்டை பொருத்தவரை இங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற 

வெங்காயம், மிளகாய் போன்ற உற்பத்தி பொருட்களுக்கு தரமான விலையினை பெற்றுக்கொடுப்பது வேண்டும் எனவும் வலியுறுத்தியதோடு குறிப்பாக தென்னிலங்கை மற்றும் வட பகுதிக்கு இடையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் 

குறித்த உற்பத்தி பொருட்களின் விலை நிர்ணயம் தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். அத்தோடு வடக்கில ஆடு வளர்ப்பு தொடர்பில் அரசாங்கம் கரிசனை செலுத்த வேண்டும். அதாவது வடக்கு மாகாணத்தில் உள்ள ஆட்டு இறைச்சியைப்போல 

இலங்கையில் எந்த பாகத்திலும் சுவையானதாக இல்லை எனவே வடக்கு மாகாணத்தில் ஆடு வளர்ப்பு தொடர்பில் அரசாங்கம் அதிக அக்கறை செலுத்துதற்குரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு