யாழ்.கொடிகாமத்தில் மதுவரி திணைக்களத்தினர் முற்றுகை..! கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமத்தில் மதுவரி திணைக்களத்தினர் முற்றுகை..! கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை..

யாழ்.சாவகச்சோி மதுவரி திணைக்களத்தினால் கொடிகாமம் - கெற்பெலி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின்போது சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது. 

நேற்று முன்தினம் புதன்கிழமை பிற்பகல் சாவகச்சேரி மதுவரித் நிலையத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கொடிகாமம் கெற்பொலிப் பகுதியில் மதுவரி உதவி ஆணையாளர் பிரபாத்ஜெயவிக்கிரமவின் ஆலோசனைக்கமைய 

மதுவரிஅத்தியட்சகர் தங்க ராசாவின் வழிநடத்தலில் சாவகச்சேரி மதுவரி நிலைய பொறுப்பதிகாரி அசோகரத்தினம் தலைமையிலான குழுவினர் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொண்டனர். இதன்போது 700 லிட்டர் கோடா, 

ஆறு லீட்டர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளது. கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் தப்பிச் சென்ற நிலையில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Radio