அபிவிருத்தியில் பெண்களின் பங்களிப்பு முக்கியத்துவம்; பெற்றிருந்தாலும், அதற்கான சமூக அங்கீகாரமும், சமத்துவமும் கிடைப்பதில்லை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ்
உலக சனத்தொகை புள்ளிவிபரங்களின்படி, பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று நாட்டின் தொழில்துறையில் முன்னின்று உழைக்கும் சக்தியாக பெண்கள் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் கடின உழைப்பில் எத்தனையோ குடும்பங்கள் வாழ்கின்றது. ஆண்களைப் போலவே பெண்களும் இன்று வேலைத் தளங்களுக்குச் சென்று உழைத்து ஊதியம் பெறுகின்றனர். மற்றுமோர் வகையில் முறைசாறாத் தொழில்களில் அற்பணிப்புடன் ஈடுபட்டு அதில் பெருமளவு சம்பாதித்து தொழில் வளங்குனர்களாக மாறியிருப்பதையிட்டு பெண் சமுகம் பெருமை கொள்கிறது. அபிவிருத்தியில் பெண்களின் பங்களிப்பு முக்கியத்துவம்; பெற்றிருந்தாலும், அதற்கான சமூக அங்கீகாரமும், சமத்துவமும் கிடைப்பதில்லை என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் கருத்துத் தெரிவித்தார்.
பெண்கள் தொடர்பாக பணியாற்றுகின்ற அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகளுக்கான கூட்டம் 2021.02.25 அன்று கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழு காரியாலயத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது கருத்;துத் தெரிவித்த அஸீஸ், பிள்ளை வளர்ப்பு விடயத்தில் அதீத அக்கறை காட்டி ஒவ்வொரு தாய்மாரும் தங்களை சிறந்த நிர்வாகிகளாகவும், வாழ்க்கைத் துணைவனான கணவனின் விருப்பு வெறுப்புக்களை அறிந்து செயற்பட்டு தன்னை அறிவாற்றல்மிக்கவளாய் குடும்ப சூழலில் ஒரு பெண் எத்தகைய நிலையிலும் வாழப் பழகி;க் கொள்கிறாள். எமது நாட்டில் இன்று போதைப்பொருள் பாவனை சிறியோர் முதல் வயோதிபர் வரை மலிந்து காணப்படுகிறது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது தாய்மார்களே.
சொகுசு வாழ்க்கையில் விருப்பம் காட்டி எத்தனையோ வங்கிகள் நுண்கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தி பெண்களை கடன்காரர்களாக ஆக்குகிறது. ஆடம்பரப்பொருட்களை கொள்வனவு செய்து அதனை மாதாந்த தொகையுடன் செலுத்த முடியாமல் எத்தனையோ பெண்கள் பரிதவிக்கின்றனர். பெண்கள் மீதான அடக்கு முறைக்கெதிரான மாற்றுக் கருத்துக்கள் முன்வைக்க வேண்டிய தேவைப்பாடு அனைவருக்கும் உள்ளது. பெண்கள் பொறுமை, அடக்கம் போன்ற குணாதிசயங்களைக் கொண்டிராத சந்தர்ப்பத்தில் பெண்மை இழந்தவள் என்று இந்தச் சமூகம் முத்திரையிடுகிறது.
பெண்களுக்கான உரிமை இல்லாதவிடத்தில் மனித உரிமைகள் இருக்க முடியாது. மணமுடித்த கணவன் மனைவியையும், பிள்ளைகளையும் அநாதரவாய் விட்டுச் சென்றுள்ளானெனவும், பிள்ளைகளைப் பராமரிக்க முடியாமல் வாழ்க்கைச் சுமைகளை சுமந்து கண்ணீர் விட்டழுகின்ற பெண்களின் நிலை பற்றியும், குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்ட பெண் அதனை நடவடிக்கைக்காக கொண்டு வருவதில்லையெனவும், கொரோனா தொற்று காலத்தின் போது வீட்டில் அனைவர்களும் முடங்கிக் கிடந்த போது பெண்ணானவள் இயந்திரம் போல் வேலை செய்து குடும்பச் சுமைகளுடன் உருக்குலைந்து போனதையும் நாம் கவனஞ்செலுத்த வேண்டும் எனவும், இவ்விடயங்களை பெண்கள் தொடர்பாக பணியாற்றுகின்ற அரச உத்தியோகத்தர்கள் பொறுப்புடன் கையாள வேண்டும் என அஸீஸ் கருத்துத் தெரிவித்தார்.