உலகம் முழுவதும் கொரோனாவால் 25 இலட்சம் பேர் சாவு!! -தொற்றாளர்களின் எண்ணிக்கை 11.30 கோடியை தாண்டியது-

ஆசிரியர் - Editor II
உலகம் முழுவதும் கொரோனாவால் 25 இலட்சம் பேர் சாவு!! -தொற்றாளர்களின் எண்ணிக்கை 11.30 கோடியை தாண்டியது-

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் இதுவரை 25 இலட்சம் பேர் உயிரிழந்துள்ள அதே வேளை, கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8.86 கோடியாக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.30 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 11,30,81,640 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை 8,86,98,691 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 25 இலட்சத்து 6 ஆயிரத்து 752 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,18,76,197 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 91,856 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு