SuperTopAds

இராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைவிட வேண்டும்!! -மியன்மாருக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை-

ஆசிரியர் - Editor II
இராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைவிட வேண்டும்!! -மியன்மாருக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை-

மியான்மர் நாட்டில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை இராணுவம் கடந்த முதலாம் திகதி கவிழ்த்துவிட்டு அங்கு இராணுவ ஆட்சி அதிகாரம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 

அந்நாட்டு இராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு உலகின் பெரும்பாலான நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. குறிப்பாக அமெரிக்கா, மியன்மார் இராணுவத்தை வன்மையாக கண்டித்ததோடு மட்டுமல்லாமல் இராணுவ தலைவர்கள் மீது பொருளாதார தடைகளையும் விதித்தது.

இராணுவ ஆட்சி தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ்:- 

மியான்மர் இராணுவம் தனது சட்டவிரோத ஆட்சியை கைவிட வேண்டும். ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மீட்டெடுக்க வேண்டும். நாங்கள் மியான்மர் மக்களுடன் துணை நிற்கிறோம். 

மியான்மரில் மக்களாட்சியைக் கொண்டு வருவதற்கான அவர்களின் விருப்பத்தை ஆதரிப்பதற்காக உலகெங்கிலுமுள்ள எங்களுடன் ஒத்த எண்ணம் கொண்ட கூட்டாளிகளுடன் இணைந்து செயல்படுவோம் என்றார்.