பழைய சாதம் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்!

ஆசிரியர் - Admin

மறுநாள் போனதும் இன்று நாம் குப்பையில் கொட்டும் உணவுதான் பழைய சாதம். முதல் நாளில் மீதம் வந்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி விட்டு அந்த சாதத்தையும், தண்ணீரையும் அடுத்த நாள் காலையில் அருந்துவது தான் பழைய சோறு. இதில் வைட்டமின் பி6, பி12 போன்ற ஊட்ட சத்துக்கள் நிரம்பியுள்ளன. 

மேலும் வடித்த சாதத்தில் சுமார் 3.4 மில்லி கிராம் இரும்புச்சத்து தான் இருக்கிறது. இப்படிபட்ட ஆரோக்கிய உணவான பழைய சாதம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  1. உடலில் அதிகமாக ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்றாக உடல் சூடு உள்ளது. இந்த சூடு தான் உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைந்துள்ளது.
  2. சிலருக்குு வாய்ப்புண் , குடல் புண், வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் உடலில் அதிகமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் பழைய சாதம் சாப்பிட்டால் படிப்படியாக மாற்றத்தை தரும்.
  3. இரத்தத அழுத்த பிரச்னை உள்ளவர்கள் தொடர்ந்து பழைய சாதத்தை சாப்பிட்டு வர இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
  4. சிலர் அதிகமாக வேலை செய்து சோர்ந்து போய் விடுவர். அப்படி அதிக வேலை செய்பவர்கள் உடலில் சோர்வு ஏற்படாமல் இருக்க பழைய சாதத்தை சாப்பிடுங்கள். ஏனென்றால் சோர்வை போக்கும் ஆற்றலை பழைய சாதம் கொண்டிருக்கின்றது.
  5. பழைய சாதத்தில் அதிக அளவில் நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் கூட இந்த சாதத்தை அதிகம் சாப்பிட்டால் நல்ல பலனை தரும்.
  6. அடிக்கடி பழைய சாதம் சாப்பிட்டு வந்தால் இளமையாக மட்டுமல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.
  7. தோல் சம்பந்தமான நோய்களை போக்கும் ஆற்றல் உடையதாக பழைய சாதம் உள்ளது. மேலும் இது பாஸ்ட் புட் போன்று இது உடலுக்கு எந்த கெடுதலையும் ஏற்படுத்தாது.
  8. அல்சர் பிரச்சனையை போக்கும் நல்ல மருந்தாக பழைய சாதம் பயன்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு