அமெரிக்காவில் மீண்டும் தலைதூக்கும் துப்பாக்கி கலாசாரம்!! -3 நாட்களில் 4 பேர் சுட்டுக் கொலை-

ஆசிரியர் - Editor II
அமெரிக்காவில் மீண்டும் தலைதூக்கும் துப்பாக்கி கலாசாரம்!! -3 நாட்களில் 4 பேர் சுட்டுக் கொலை-

அமெரிக்காவில் அண்மைய காலமாக தலைதூக்கியுள்ள துப்பாக்கி கலாசாரத்தை அடுத்து அங்கு அதிகரித்துள்ள துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

நியூ ஏர்லியன்ஸ் நகரில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள மிசோரி மாநிலத்தில் உள்ள களியாட்ட விடுதியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 4 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களின் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Radio