மியன்மாரில் சுட்டுக் கொல்லப்பட்ட பெண்ணின் இறுதி ஊர்வலம்!! -ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி இறுதி மரியாதை-

ஆசிரியர் - Editor II
மியன்மாரில் சுட்டுக் கொல்லப்பட்ட பெண்ணின் இறுதி ஊர்வலம்!! -ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி இறுதி மரியாதை-

மியன்மார் இராணுவ ஆட்கிக்கு எதிரான போராட்டத்தில் கொல்லப்பட்ட பெண்ணின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரங்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

தமது 20 ஆவது பிறந்த தினத்திற்கு ஒரு சில நாட்களே இருந்த நிலையில் அங்கு போராட்டத்தில் கலந்து கொண்ட குறித்த பெண் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் அவரது உலத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்தி மரியாதை செய்யும் முகமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை வீதி ஓரங்களில் ஆயிரங்கணக்கான மக்கள் கூடியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களில் இதுவரையில் மூவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Radio