மியன்மார் ஆட்சி கவிழ்ப்பு எதிர்ப்பு போராட்டம்!! -முதல் உயிரிழப்பு பதிவானது-
மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு பொது மக்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
கடந்த 9 ஆம் திகதி தலைநகர் நெய்பிடாவ்வில் நடத்தப்பட்ட முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, ஒரு இளைஞன் மார்பிலும், மற்றொரு பெண் தலையிலும் துப்பாக்கி சூட்டு காயங்களுக்கும் இலக்காகினர்.
காயமடைந்த இருவரில் பெண், ஆபத்தான நிலையில் இருப்பதை வைத்தியர்கள் தெரிவுத்துவந்த நிலையில் அவர் தற்போது உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆட்சி கவிழ்ப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் இறந்த முதல் எதிர்ப்பாளராக அவர் மாறியுள்ளார்.
20 வயதான மியா த்வே த்வே கைங் என்ற பெண்ணே இதன் போது உயிரிழந்துள்ளதா அறிவிக்கப்பட்டுள்ளது.