SuperTopAds

கொரோனா உருவாக்கம் குறித்து அமெரிக்காவில் ஆய்வு செய்யுங்கள்!! -உலக சுகாதார அமைப்பிடம் வலியுறுத்தும் சீனா-

ஆசிரியர் - Editor II
கொரோனா உருவாக்கம் குறித்து அமெரிக்காவில் ஆய்வு செய்யுங்கள்!! -உலக சுகாதார அமைப்பிடம் வலியுறுத்தும் சீனா-

கொரோனா வைரஸ் எவ்வாறு உருவானது என்பது தொடர்பில் அமெரிக்காவிலும்  உலக சுகாதார அமைப்பு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என சீனா வலியுறுத்தி உள்ளது.

சீனாவின் உகான் நகரில் உள்ள விலங்கு உணவு விற்பனை நிலையத்தில் இருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா வைரஸ் முதன்முறையாக கண்டறியப்பட்டதாக அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு நிபுணர்கள் சீனா நாட்டுக்கு சென்று அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர். இதன்பின், சீனாவில் எந்தவொரு விலங்கினத்தில் இருந்தும் கொரோனா வைரசானது பரவியதற்கான சான்று எதுவும் இல்லை என நிபுணர் குழு தெரிவித்தது.

இந்நிலையில் கொரோனா வைரசின் பிறப்பிடம் அமெரிக்காவில் இருந்து தோன்றியதற்கான சான்றுகளை பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என உலக சுகாதார அமைப்பிடம் வலியுறுத்தியுள்ளது. 

இது தொடர்பில் சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி வாங் வென்பின் கூறும்பொழுது, சீனாவை எடுத்துக்காட்டாக கொண்டு, கொரோனா வைரசின் பிறப்பிடம் பற்றி கண்டறியும் விவகாரத்தில் அமெரிக்காவும் நல்ல விதத்தில், அறிவியல் அடிப்படையில் மற்றும் ஒத்துழைக்கும் வகையில் நடந்து கொள்ளும் என நாங்கள் நம்புகிறோம்.

கொரோனா வைரசின் பிறப்பிடம் பற்றி ஆய்வு மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பின் நிபுணர்களை வரவேற்கும் என கூறியுள்ளார்.