SuperTopAds

அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்களுடன் கலந்துரையாடல்

ஆசிரியர் - Editor III
அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்களுடன் கலந்துரையாடல்

அம்பாறை மாவட்டத்தின அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் நடவடிக்கை தொடர்பில் ஆதரவாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்று கல்முனை பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று(16) இரவு இடம்பெற்றது.

இதன் போது  கொரோனா சுகாதார விதிமுறைகள்  பின்பற்றப்பட்டு குறித்த   கலந்துரையாடலானது  சட்டத்தரணி எம்.எஸ். அப்துல் றஸாக்கின் தலைமையில் இடம்பெற்றது.  

நடைபெற்று முடிந்த  தேர்தல்கள் தொடர்பாகவும் அதில் எதிர்கொண்ட சவால்கள் தொடர்பிலும் ஒவ்வொருவரும் தத்தமது கருத்துக்களை கலந்துரையாடலுக்கு வருகை தந்த கட்சி முக்கியஸ்தர்களிடம் தெரிவித்தனர்.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியை அம்பாறை மாவட்டத்தில்    மேம்படுத்தி  அதன்  செயற்பாடுகளை சிறந்த முறையில்  முன்னெடுப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன்புதிய கட்சியாக மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தி வரும் ஐக்கிய மக்கள் சக்தியை திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் தனித்து போட்டியிட அனுமதிக்க வேண்டும் என பெரும்பாலான மக்கள் பல்வேறு அறிவுறுத்தல்களை   தெரிவித்தனர்.

கலந்துரையாடலில் இறுதியாக மக்களின் உணர்வுகளை அறிந்து   உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு  கட்சிப்  பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றும் எதிர்காலத்தில் அமைக்கப்பட்டு பல்வேறு பிரச்சினைக்கு தீர்வு காண தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கட்சியின் நடைமுறை பிரச்சினைகள் தொடர்பான விடயங்களும்  ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.

இக்கலந்துரையாடலில்   ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின்   பாராளுமன்ற உறுப்பினர்களான  இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்,  முஜிபுர் ரஹ்மான் , இம்ரான் மஹ்ரூப்  ,நல்லாட்ச்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர் பொறியலாளர் அப்துல் ரஹ்மான்,  ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.ஹசன் அலி ,உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.