SuperTopAds

மியான்மரில் போராடும் மக்கள் மீதான இராணுவ அடக்குமுறை!! -பின்விளைவுகளை சந்திக்க நேடிடும் என்று எச்சரிக்கும் ஜ.நா-

ஆசிரியர் - Editor II
மியான்மரில் போராடும் மக்கள் மீதான இராணுவ அடக்குமுறை!! -பின்விளைவுகளை சந்திக்க நேடிடும் என்று எச்சரிக்கும் ஜ.நா-

மியான்மரில் பொது மக்கள் நடத்தும் போராட்டக்கள் மீது அந்நாட்டு இராணுவத்தின் அடக்குமுறைக்கு ஐ.நா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டின் அரச தலைவர்கள் 100 ற்கும் மேற்பட்டவர்கள் சிறைபிடித்து வைக்கப்பட்டு அங்கு இராணுவ ஆட்சி நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மியான்மர் மக்கள் இராணுவ ஆட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை. 

நாட்டில் ஜனநாயகம் மீட்கப்பட வேண்டும் என்று கோரி கடந்த 10 நாட்களாக அந்த நாட்டு மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடந்து வரும் தலைநகர் நேபிடாவ், யாங்கூன், மாண்டலே ஆகிய நகரங்களின் முக்கிய சாலைகளில் ஆயுதமேந்திய இராணுவ வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன.

இதற்கிடையில் போராட்டம் குறித்த செய்திகள் மற்றும் தகவல்கள் பரவுவதை தடுக்கும் வகையில் நேற்று திங்கட்கிழமை முன்தினம் நள்ளிரவு முதல் நாடு முழுவதும் மீண்டும் இணைய சேவை முடக்கப்பட்டது. இப்படி இராணுவம் தனது பிடியை இறுக்கி வந்தாலும் அதற்கு எதிரான மக்களின் போராட்டம் தொடரத்தான் செய்கிறது.

இந்த நிலையில் மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி வரும் போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை ஏவப்படுவதாக ஐக்கிய நாடுகள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக ஐ.நா சபையின் மியான்மர் நாடிற்கான சிறப்பு தூதர் கிறிஸ்டின் ஸ்ரானர் புர்கெனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இராணுவ ஆட்சிக்கு எதிரான மக்களின் போராட்டத்தை ஒடுக்க அந்நாட்டு இராணுவம் அடக்குமுறைகளை மேற்கொள்வதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் அமைதியான போராட்டத்தை நடத்தும் மக்களின் உரிமை மதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், மியான்மரில் நடப்பதை உலக நாடுகள் கவனித்து வருவதாகவும், போராட்டம் நடத்தும் மக்கள் மீது கடுமையாக நடந்து கொண்டால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.