போராடினால் 20 ஆண்டுகள் சிறை!! -மியான்மர் இராணுவம் கடும் எச்சரிக்கை-
இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவர்களுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மியான்மர் இராணுவம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மியான்மரில் தீவிரமடையும் போராட்டங்கள் குறித்த செய்திகள் மற்றும் தகவல்கள் பரவுவதை தடுக்கும் விதமாக நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நாடு முழுவதும் மீண்டும் இணைய சேவை முடக்கப்பட்டது. இருப்பினும் இராணுவத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் தொடரத்தான் செய்கிறது.
நேற்றும் மியான்மரின் பல்வேறு முக்கிய நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராடி வருகின்றனர்.
இதற்கிடையே, மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்நாட்டு இராணுவம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இராணுவ அதிகாரிகளுக்கு எதிரான கருத்துக்களை பரப்புவர்களுக்கு நீண்ட கால சிறை தண்டனை, அபராதம் ஆகியவை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.