SuperTopAds

சுமந்திரன் என்ற புத்திசாலியை உள்வாங்கியதனால் தான் ஐ.தே.கட்சி அழிந்தது

ஆசிரியர் - Editor III
சுமந்திரன் என்ற புத்திசாலியை உள்வாங்கியதனால் தான் ஐ.தே.கட்சி அழிந்தது

சுமந்திரன் ஒரு புத்திசாலி.யு.என்.பி சார்பானவர்.அவரை டயஸ்போரா தேசிய பட்டியல் கொடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பிற் கூடாக பாராளுமன்றம் அனுப்புகின்றனர்.அவரை உள்வாங்கியதனால் தான் யு.என்.பி அழிந்தது   என  கல்முனை மறுமலர்ச்சி மன்ற தலைவர் நஸீர் ஹாஜியார்  தெரிவித்துள்ளார்.

பொத்துவில் -பொலிகண்டி பேரணி  கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்துவது தொடர்பில்     விசேட செய்தியாளர் சந்திப்பு திங்கட்கிழமை (15) இரவு  கல்முனையில் இடம்பெற்ற போது மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என்ற கோஷம் பேரணியில் சென்றவர்களால் எழுப்பப்பட்டதனை முகநூலில் பார்த்தேன்.இவ்வாறு தான் 1956 ஆண்டு சிறி எதிர்ப்பு போராட்டம் சிங்கள மொழி திணிப்பு சம்பந்தமாக ஊர்வலம் செல்கின்ற போது ஏகாம்பரம் ஐயா தந்தை செல்வநாயகமும் செல்கின்றார்.இவ்விடயத்தை ஏகாம்பரம் ஐயா என்னிடம் கூறியும் உள்ளார்.இவ்வாறு சிறி எதிர்ப்பு பேரணி செல்கின்ற போது ஏகாம்பரம் சிங்களம் ஒழிக என்று கோஷம் எழுப்புகின்றார்.செல்வநாயகம் இதனை கேட்டவுடன் சத்தம் போடாதே அது நமது நோக்கமல்ல என கூறுகின்றார்.நமது இலக்கினை நாம் நோக்கி நகர வேண்டும் என சொல்கின்றார்.இதே போன்று சாணக்கியன் போன்றவர்கள் இதயசுத்தியுடன் பேரணியினை நடாத்தி சென்றிருந்தால் அதாவது தந்தை செல்வாவின் முன்மாதிரியை கருத்தில் கொண்டு இவ்வாறு செய்யாதீர்கள் என கூறியிருப்பாராயின் செல்வநாயகத்தை போன்ற ஒரு தலைவராக இவரை ஏற்றுக்கொண்டிருக்கலாம்.

அவரும் இப்பேரணியில் இணைந்து சென்றதனால் உள்மனதில் என்ன உள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.தற்போது வந்துள்ள சாணக்கியன் என்பவர் யார்?சிங்க தமிழ் கலப்பு குடும்பத்திற்குள் இருந்து உருவான கரு அவர்.அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்ற அரசியலுடன் பின்னிபிணைந்து காலத்தின் தேவையினால் டயஸ்போராவினால் கொண்டு வரப்பட்டவர்.அதாவது  எவ்வாறு சுமந்திரனை  ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து  உருவாக்கியது போன்று தான்.சுமந்திரனின் தந்தை  வடக்கில் இராணுவத்தால்  நூலகம் எரிக்கப்பட்ட போது ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய பிரதிநிதியாக இருக்கின்றார். பாதுகாப்பு நிமிர்த்தம் பிள்ளைகளுடன் இலண்டனுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றார்.

அங்கு அக்குடும்பம் யு.என்.பி சார்பு உள்ள குடும்பமாக செயற்படுகின்றது.கடந்த நல்லாட்சி காலத்தில் தமிழர்களின் கருத்துக்களை உட்புகுத்துவதற்காக ஒரு சிறந்த ஒருவர் தேவைப்பட்டார்.அவர் ஒரு புத்திசாலி.யு.என்.பி சார்பானவர்.அவரை தேசிய பட்டியல் கொடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கூடாக பாராளுமன்றம் அனுப்புகின்றனர்.அவரை உள்வாங்கியதனால் தான் யு.என்.பி அழிந்தது.அதே போன்று டயஸ்போராவானது  மஹிந்த குடும்பத்துடன் நெருக்கமான சிங்கள குடும்பங்களுடன் பரிட்சயமான மூன்று மொழிகளையும் சரளமாக பேசக்கூடிய ஒரு திருமணமாகாத துடிப்புள்ள இளம் வாலிபனை கூட்டமைப்பிற்கூடாக பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.

நடந்து முடிந்த பொத்துவில் -பொலிகண்டி  பேரணியில் முஸ்லீம்கள் எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கின்றார்கள் என்பதை உலகத்திற்கு காட்டியுள்ளனர்.முஸ்லீம்கள் சிலருக்கு விளக்கமில்லாமல் சாணக்கியனுக்கு பின்னால் சென்றுள்ளனர்.கோஷம் போட்டால் கோட்பாடுகள் இன்றி பின்னால் சென்று விடுவார்கள்.பதுளையால் ஈழம் கேட்டவர்கள் கல்முனை பிரதேச செயலகத்திற்காக போராடுகின்றார்கள்.இதன் முக்கிய நோக்கம் என்ன இலங்கையில் முஸ்லீம்களிற்கு கல்முனை தான் கருவான இடம்.எம்.எஸ் காரியப்பரில் இருந்து எம்.எச்.எம் அஸ்ரப் வரை கல்முனையில் இருந்து தான் தலைமைத்துவம் உருவாக்கப்பட்டுள்ளது.உதாரணமாக சிறி எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றபோது பண்டாரநாயக்கவின் தலைமையிலான ஆட்சி இடம்பெற்றிருந்தது.அமைச்சரவையில் கூடி தமிழர்கள் சிறி என்ற பதத்தை புறக்கணிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.கல்முனை மண்ணை சேர்ந்த காரியப்பர் தமிழர்களே அரச உத்தியோகம் அதிகம் செய்வதாகவும் மாதம் நிறைவடைந்ததும் சம்பளத்தை பெற்று பக்கெற்றில்  போட்டுகொண்டு சென்று விடுவார்கள் என்றார்.இதனால் சிறி என்ற பதத்தை பணத்தில் பதிக்குமாறும் அதனை  அவர்கள் புறக்கணிக்கின்றார்களா? என்பதை அறிய யோசனை அப்போது கூறியுள்ளார்.

அப்போது பணத்தில் சிறி என்ற பதத்தை பதித்ததும் அனைவரும் அதனை பக்கெற்றில் மடித்து வைத்து சென்றுவிட்டனர்.போராட்டமும் நிறைவடைந்தது.அவ்வாறு கல்முனை பிரசித்தமான ஒரு ஊர்.கல்முனையின் பெருமதி டயஸ்போராவிற்கு தெரியும்.அதனால் கல்முனையை வடக்கு தெற்காக பிரித்து பெறுமதி இல்லாமல் ஆக்குவதற்கு முயற்சிக்கின்றனர்.சதி ஒன்று இடம்பெறுகின்றது.ஆனால் எமது அரசியல் தலைவர்கள் பிரதமரின் குசினிக்குள் சென்று உரையாடி விட்டு வந்தேன்.பின்கதவால் அமைச்சரை சந்தித்தேன் என கூறி வருகின்றனர்.எமக்கு பூச்சாண்டி காட்டி திரிகின்றனர்.இவ்விடயம் குசினிக்குள் கதைப்பதல்லை கல்முனையின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும்.அம்பாறை மாவட்டத்தை பொறுத்தவரை கோடிஸ்வரன் தோல்வி அடைந்து விட்டார்.அதாவது கூட்டமைப்பு தோல்வி அடைந்து விட்டது.கருணாவின் வரவு மற்றும் ஏனைய காரணிகளால் ஒரு பிரதிநிதித்துவத்தை இழந்துள்ளனர்.அதற்கு காரணம் கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தி கொடக்கப்படவில்லை.இதனால் வாக்கு அளிக்கப்படவில்லை.தற்போது இழந்த கூட்டமைப்பின் செல்வாக்கினை பேரணி மீண்டும் உயிர்ப்பித்துள்ளது.எனினும் மறுபுறம் தமிழர்களின் பேரணியினால் சிங்கள மக்கள் மத்தியில் அரசாங்கத்திற்கு ஆதரவு அதிகரித்துள்ளது.இதனை ஒரு கல்லில் இரண்டு மாங்காய் பறித்த மாதிரி சாணக்கியனும் அரசாங்கமும் சேர்ந்து இப்பேரணியை முன்னெடுத்துள்ளது என்பதே எனது கருத்தாகும் என்றார்.