2 ஆவது குழந்தைக்கு தந்தையாகிறார் இங்கிலாந்து இளவரசர் ஹாரி!!

இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் மெர்கல் 2 ஆவது குழந்தைக்கு தாயாகியுள்ள நிலையில் இதுதொடர்பாக ஹாரி தம்பதியினர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டனர்.
இங்கிலாந்து மகாராணி 2 ஆவது எலிசபெத்தின் 2 ஆவது பேரன் ஹாரி, தொலைக்காட்சி நடிகையான மேகன் மெர்கலை காதலித்து திருமணம் செய்தார்.
ஹாரி கடந்த வருடம் மார்ச் மாதம் அரச வாழ்க்கையை விட்டு விலகுவதாக அறிவித்தார். அதை தொடர்ந்து தனது மனைவியுடன் இங்கிலாந்து அரண்மனையை விட்டு வெளியேறினார். தற்போது இவர் தனது மனைவி மேகன் மெர்கலுடன் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்.
அவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஹாரியின் மனைவி மேகன் மெர்கல் 2 ஆவது குழந்தைக்கு தாயாக இருக்கிறார். இந்த செய்தியை ஹாரியின் செய்திதொடர்பாளர் காதலர் தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஹாரி தம்பதியினர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டனர். ஒரு மரத்தின் கீழ் புன்னகையுடன் நிற்கிறார்கள். அதில் மேகன் மெர்கல் கர்ப்பமாக இருப்பது தெரிகிறது.