சீனாவில் பி.பி.சி செய்தி சேவைக்கு முழு தடை!! -அமெரிக்கா, இங்கிலாந்து கடும் கண்டனம்-
கொரோனா வைரஸ் தொற்றை சீனா அரசு கையாண்ட விதம் தொடர்பிலும், ஜிங்ஜியாங் பிரச்சினை குறித்து தவறான செய்திகளை பி.பி.சி உலக செய்தி ஒளிபரப்பியதாக சீனா குற்றம்சாட்டியது. இதையடுத்து, பி.பி.சி செய்தி ஒளிபரப்புக்கு சீனா அரசாங்கம் தடை விதித்ததாக கூறப்படுகிறது.
சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இங்கிலாந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ராப் இது தொடர்பில் தெரிவிக்கையில்:-
சீனா அரசின் இந்த நடவடிக்கை ஊடக கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் இது தொடர்பில் அமெரிக்காவும் சீனாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.