ஜோ பைடன், சீன ஜனாதிபதியுடன் திடீர் பேச்சு!! -தெலைபேசியில் நடந்ததாக தகவல்-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன், சீன ஜனாதிபதி ஜின்பிங்கிற்கும் இடையில் தொலைபேசியில் உரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாட்டிற்கும் இடையில் அண்மைக்காலமாக மோதல் நிலை வலுவடைந்து வருகின்றது. இந்நிலையில் ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங்கை நேற்று முன்தினம் தொலைபேசியில் அழைத்து பேசினார்.
சீனாவில் இன்று வெள்ளிக்கிழமை சந்திர புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜின் பிங்குக்கும், சீன மக்களுக்கும் ஜோபைடன் முதலில் வாழ்த்துகளை தெரிவித்தார்.
சீனாவின் நியாயமற்ற பொருளாதார செயல்பாடுகள், ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்து, ஜனநாயக ஆர்வலர்களை ஒடுக்கும் சீனாவின் நடவடிக்கைகள், சின்ஜியாங்கில் உய்குர் இன மக்கள் மீது சீனா கட்டவிழ்த்து விடும் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்டவற்றில் சீன அதிபர் ஜின்பிங்கிடம் ஜோ பைடன் தனது கவலையை வெளியிட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.