தடுப்பூசி போட்டுக்கொண்ட இங்கிலாந்து இளவர தம்பதியினர்!!
இங்கிலாந்து நாட்டின் இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இங்கிலாந்தியல் கொரோனா வைரசால் மிகவும் மோசமான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. அங்கு தற்போது முன்பைவிட அதிக வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவியது.
இந்நிலையில் அங்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளும் முழுவீச்சில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. உலகிலேயே கொரோனா தடுப்பூசியை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்த முதல் நாடு இங்கிலாந்துதான்.
அந்த வகையில் இங்கிலாந்தில் இதுவரை ஒரு கோடியே 20 இலட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அந்தவகையில் 94 வயதான இங்கிலாந்து ராணி 2 ஆம் எலிசபெத்துக்கும், 99 வயதான அவரது கணவர் பிலிப்புக்கும் கடந்த மாதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
இந்த நிலையில் ராணி 2 ஆம் எலிசபெத்தின் மூத்த மகனும் இளவரசருமான சார்லசுக்கு (வயது 72) நேற்று புதன்கிழமை தடுப்பூசி போடப்பட்டது. 73 வயதான அவரது மனைவி கமிலாவும் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.