SuperTopAds

அவுஸ்ரேலியா அருகே பயங்கர நிலநடுக்கம்!! -3 மணிநேரத்திற்கு சுனாமி எச்சரிக்கை-

ஆசிரியர் - Editor II

அவுஸ்ரேலிய கடற்பரப்பிற்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டள்ளதை அடுத்து முன்னெச்சரிக்கையாக அங்குள்ள கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அந்நாட்டின் கடற்பரப்பிற்கு அருகே தெற்கு பசுபிக் பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அங்கு ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் நியுசிலாந்து, அவுஸ்ரேலியா மற்றும் அந்நாடுகளைச் சுற்றியுள்ள குட்டித் தீவுகளை அதிர வைத்துள்ளது.

பிஜி, நியுசிலாந்து உள்ளிட்ட கடல் பகுதிகளில் அலைகள் அதிக அளவில் இருந்ததாகவும் சுமார் மூன்றரை அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நிரநடுக்கத்தால் அபாயகரமான சுனாமி அலைகள் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் உருவாக வாய்ப்புள்ளதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.