மியான்மர் இராணுவ ஆட்சியாளர்களுக்கு அமெரிக்கா முழு தடை!! -சொத்துக்களையும் முடக்கி ஜோ பைடன் அதிரடி-
மியான்மரில் இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து அந்நாட்டு இராணுவ ஆட்சித் தலைவர்களுக்கு அமெரிக்கா பொருளாதார ரீதியாக தடைகளை விதித்துள்ளது.
குறிப்பாக அந்நாட்டு இராணுவத் தலைவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய வர்த்த நடவடிக்கைகள் மீது தடைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், அமெரிக்காவில் நிர்வகிக்கப்படும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியைக் கையாள்வதைத் தடுக்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இத்தடைகள் விதிப்பது தொடர்பிலான நிறைவேற்று அதிகார நிர்வாக உத்தரவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அனுமதி வழங்கியுள்ளார்.