மியான்மாரில் போராடும் மக்கள் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு!! -தலையில் குண்டு பாய்ந்ததில் துடிதுடித்து கீழே விழுந்த பெண்-
மியான்மரில் வலுவடையும் போராட்டத்தை கலைக்க இராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண்ணின் தலையில் பாய்ந்ததில் அவர் துடிதுடித்து கீழே விழுந்துள்ளார்.
அந்நாட்டில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட அரசு கடந்த முதலாம் திகதி பாராளுமன்றத்தை கூட்ட இருந்து நிலையில் அதிரடியாக இராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுத்து, கைது செய்யப்பட்ட அந்த நாட்டின் தலைவரான ஆங் சான் சூ கி உள்ளிட்டவர்களை விடுதலை செய்யக்கோரி போராட்டங்களை நடத்துகின்றனர்.
இந்த நிலையில் மியான்மரின் நேபிடா எனும் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த 4 ஆவது நாளாகவும் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டக்காரர்களை கலைந்து செல்ல இராணுவத்தினர் வலியுறுத்தினர். அவர்கள் மீது தண்ணீர் பாய்ச்சினர். மேலும் எச்சரிக்கை செய்வதற்காக வானை நோக்கி துப்பாகியால் சுட்டனர்.
அப்போது அங்கிருந்த பெண் ஒருவரின் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதனால் அந்த பெண் அதே இடத்தில் சரிந்து விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
தற்போது அந்த பெண் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் சிலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.