SuperTopAds

இன்றைய நாள் எப்படி 18/03/2018

ஆசிரியர் - Admin
இன்றைய நாள் எப்படி 18/03/2018

இன்று!
ஹேவிளம்பி வருடம், பங்குனி மாதம் 4ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 29ம் தேதி,
18.3.2018 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, பிரதமை திதி இரவு 7:10 வரை;
அதன் பின் துவிதியை திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 8:43 வரை;
அதன்பின் ரேவதி நட்சத்திரம், அமிர்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
* ராகு காலம் : மாலை 4:30-6:00 மணி
* எமகண்டம் : மதியம் 12:00-1:30 மணி
* குளிகை : மதியம் 3:00-4:30 மணி
* சூலம் : மேற்கு

* பரிகாரம் : வெல்லம்
* சந்திராஷ்டமம் : பூரம்,உத்திரம்
* பொது : தெலுங்கு புத்தாண்டு, சூரியன் வழிபாடு.

மேஷம்: திட்டமிட்ட பணிகளில் கவனச்சிதறல் ஏற்படலாம். நலன் விரும்புவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி தாமதமாக நிறைவேறும். பணவரவு சுமாராக இருக்கும். பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம்.

ரிஷபம்: நண்பர்களின் மீதான நம்பிக்கை வளரும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான நன்மையை எதிர்பார்க்கலாம். சேமிக்கும் விதத்தில் ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களின் ஆதரவைப் பெற்று மகிழ்வர். உறவினர் வரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுனம்: திட்டமிட்ட செயல்கள் எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரம் செழித்து புதிய இலக்கை எட்டும். வருமானம் அதிகமாகும். வீடு, வாகனத்தில் கூடுதல் வசதி பெற நவீன மாற்றம் செய்வீர்கள். பெண்களுக்கு தாய்வீட்டாரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

கடகம்: முக்கிய செயல்களில் குளறுபடி ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்க தாமதம் ஏற்படும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

சிம்மம் : குடும்ப சிரமம் பற்றி பிறரிடம் சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கடின உழைப்பு தேவைப்படும். லாபம் சுமார். பெண்கள் வீட்டுச் செலவில் சிக்கனம் பின்பற்றவும். நகை, பணம். பொருட்கள் இரவல் கொடுக்க வாங்க வேண்டாம்.

கன்னி: உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை நிறைவேற்றுவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். அரசியல்வாதிகள் அரசு சார்ந்த உதவி பெற அனுகூலம் உண்டு.

துலாம்: எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பநிலை சரியாகும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணியால் லாபம் உயரும் அதிர்ஷ்டகரமாக பூர்வீக சொத்து கிடைக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

விருச்சிகம்: பொது இடங்களில், பிறருடன் வாக்குவாதம் வேண்டாம். தொழில், வியாபாரத்தில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் அதிகரிக்கும். செலவுகளில் சிக்கனம் கடைப்பிடிப்பது நல்லது. சீரான ஓய்வு உடல்நலம் பாதுகாக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு செய்யவும்.

தனுசு : சிலர் மாறுபட்டு பேசலாம். செயல்களில் நிதானம் பின்பற்ற வேண்டும். தொழில், வியாபார நடைமுறையில் தாமதம் உருவாகும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். தேவை அறிந்து வெளியூர் பயணம் செய்யவும்.

மகரம் : தவறாக விமர்சித்தவரும் அன்பு பாராட்டுவார். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துவீர்கள். பணவ முன்னேற்றம் பெறும். பிள்ளைகள் விரும்பிக்கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள்.

கும்பம் : எதிர்பார்த்த செயல் நிறைவேற தாமதமாகலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை தாமத கதியில் இயங்கும். சேமிப்பு பணம் முக்கிய செலவுக்கு பயன்படும். போக்குவரத்தில் மிதவேகம் கவனநடை பின்பற்றுவது நல்லது.

மீனம் : அன்றாட பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். கடின பணி கூட எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். லாபம் படிப்படியாக கூடும். பணியாளர்கள் சம்பளஉயர்வு கிடைக்கப் வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்