மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம்!! -கண்ணீர் குண்டு, ரப்பர் தோட்டா, நீர்த் தாரை கொண்டு பொலிஸ் தாக்குதல்-
மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்புத் வெளியிட்டு இன்று செவ்வாய்க்கிழமையும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
குறிப்பிட்ட ஒரு தொகையினருடன் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் வலுவடைந்து அதிகளவானவர்கள் போராட்டம் நடத்தும் இடத்திற்கு கூடியதை அடுத்து போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டதுடன், ரப்பர் தோட்டக்களைப் பயக்படுத்தித் தாக்குதல் நடத்தப்பட்டது. அத்துடன் நீர்த் தார பிரயோகமும் செய்யப்பட்டது.
இராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டில் போராட்டங்கள் வலுவடைந்து வருவதை அடுத்து நேற்று திங்கட்கிழமை பேருக்கு மேல் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டது. அத்துடன், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்களும் தடை செய்யப்பட்டன. சில நகரங்களில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் தடைகளைத் தாண்டியும் மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.