கொரோனா சீனாவில் உருவானதற்கான ஆதாராங்கள் கண்டுபிடிப்பு!! -விசாரணை நடத்தும் ஆய்வுக்குழு இன்று வெளியிட்ட தகவல்-
சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் எவ்வாறு உருவாகியது என்பது தொடர்பில் விசாரணை நடத்தும் உலக சுகாதார அமைப்பின் சிறப்பு ஆராய்ச்சி குழு இதுவரை கண்டுபிடித்ததை இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டு உள்ளனர்.
இது தொடர்பில் உலக சுகாதார அமைப்பின் பென் எம்பரேக் கூறுகையில்:-
அண்மையில் நடந்த விசாரணையில் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. உகான் {ஹவானன் சந்தைக்கு வெளியே 2019 டிசம்பரில் பரவலாக கொரோனா புழக்கத்தில் இருந்ததற்கான ஆதாரங்களை குழு கண்டறிந்து உள்ளது என கூறினார்.
கொரோனா வவ்வால்களில் தோன்றியது மற்றும் பாலூட்டி வழியாக மனிதர்களுக்கு பரவி இருக்க கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். ஆனால் உலக சுகாதார அமைப்பின் ஆய்வுக்குழு கொரோனா வைரஸ் தொற்றிற்கு உரிய விலங்கு இதுதான் என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை என கூறி உள்ளது.