வீட்டுக்காவலில் ஆங் சான் சூகி!! -நல்ல உடல் நலத்துடன் உள்ளதாக தகவல்-
மியான்மர் அரசுக்கும் அந்த நாட்டு இராணுவத்துக்கும் இடையே நடந்துவந்த மோதல் நிலையை அடுத்து அண்மையில் இராணுவம் அதிரடியாக அந்நாட்டின் ஆட்சியை கைப்பற்றியது.
நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை இராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.
இந்நிலையில் அங்கு ஒரு ஆண்டுகாலத்திற்கு இராணுவ ஆட்சி நடைபெறும் என்றும் இராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதன்படி கடந்த திங்கள் கிழமை முதல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி, நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக அவரது தேசிய ஜனநாயக லீக் கட்சி தெரிவித்துள்ளது.