SuperTopAds

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் சுகாதார நடைமுறைகளுடன் சுதந்திரதின நிகழ்வு

ஆசிரியர் - Editor III
நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் சுகாதார நடைமுறைகளுடன் சுதந்திரதின நிகழ்வு

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 73வது தேசிய சுதந்திர தின நிகழ்வு நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் இன்று (4)  பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது  பிரதேச செயலாளரால் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டு தேசியக் கீதம் இசைக்கப்பட்டதோடு சுதந்திர தின நினைவாக   வளாகத்தில் மரங்கன்றுகளும் நட்டிவைக்கப்பட்டன. மேலும் கடந்த காலங்களில் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்தவர்களுக்காக இரு நிமிடம் மௌன பிராத்தனை நிகழ்த்தப்பட்டது.

 இந்நிகழ்வில்    நாவிதன்வெளி உதவி பிரதேச செயலாளர் என். நவநீதராஜா   நாவிதன்வெளி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி  ஆர்.லதாகரன்   நிர்வாக உத்தியோகத்தர் கே.யோகேஸ்வரன் கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் மனோஜ் இந்திரஜித் சமூர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் எஸ் .சிவம்   மேலதிக மாவட்ட பதிவாளர்  பி.நித்தியானந்தன்  கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்  அந்த அந்த பிரிவு கிராம சேவையாளர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் இந்நிகழ்வு   பிரதேச செயலகத்தில்  சுகாதார நடைமுறைகளுடன்  இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு  வர்த்தக நிலையங்கள் ,அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ,வாகனங்களில், தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு வருகின்றதை காண முடிகிறது.