உகான் ஆராய்ச்சிக் கூடத்தில் புகுந்த சர்வதேச நிபுணர்கள் குழு!! -இன்று இரண்டாவது நாளாகவும் ஆய்வு-
உயிர் கொல்லி கொரோனா வைரஸ் முதல் முதலில் உருவானதாக கூறப்படும் சீனா நாட்டின் உகான் ஆராய்ச்சிக் கூடத்தில் சர்வதேச நிபுணர்கள் குழு ஆய்வு நடத்தினர்.
கொரோனா வைரஸ் தோன்றியது எப்படி என்று விசாரணை நடத்த ஒரு நிபுணர் குழுவை உலக சுகாதார நிறுவனம் நியமித்துள்ளது.
இந்த நிபுணர்கள் குழுவில் கால்நடை மருத்துவம், தொற்றுநோய் ஆய்வு, உணவு பாதுகாப்பு, கொள்ளை நோய் ஆய்வு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
அக் குழு, சீனாவுக்குச் சென்று விசாரணை நடத்துவதற்கு அந்நாட்டு அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்தது வந்த நிலையில் அண்மையில் விசாரணை நடத்த சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து, நிபுணர் குழு சீனாவுக்கு சென்றது. 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு பின் கடந்த 29 ஆம் திகதி தமது விசாரணையை ஆரம்பித்தது.
இந்தநிலையில், உகான் நகரிலுள்ள விலங்குகள் வைத்தியசாலையில், நிபுணர் குழு நேற்று செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த நிலையில் இன்று புதன்கிழமையும் அங்கு ஆராய்ச்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு முன்னர் அந்த நகரிலுள்ள வைத்தியசாலைகள், நோய் பரவல் கட்டுப்பாட்டு மையங்கள், கொரோனா பரவத் ஆரம்பித்த சந்தை ஆகியவற்றில் நிபுணர் குழு ஆய்வு செய்தமை குறிப்பிடத்தக்கது.