கொரோனா தொற்றினால் ஆண்மை இல்லாமல் போகும்!! -ஜெர்மன் விஞ்ஞானிகளில் ஆய்வில் அதிர்ச்சி தகவல்-
ஆண்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் போது அவர்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படும் என்று ஆய்வொன்றில் அதிர்ச்சி தரும் புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் மனித உடலில் எவ்வாறான தாக்கத்தை அல்லது விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தொடர்பில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெர்மனி நாட்டில் உள்ள ஜஸ்டஸ்லைபிக் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பெக்சாத் மாலோகி மற்றும் பக்தியார் டார்டிபியன் ஆகிய இருவரும் கொரோனா கருவுறுதலில் நிகழ்த்தும் எதிர்மறையான தாக்கம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த ஆய்வு தொடர்பில் விஞ்ஞானிகள் தெரிவிக்கையில்:-
கொரோனா தொற்றுக்குள்ளாகிய 84 ஆண்களை 60 நாட்களுக்கு 10 நாட்கள் இடைவெளியில் விந்தணுவை பகுப்பாய்வு செய்து 105 ஆரோக்கியமான ஆண்களுக்கான தரவுகளுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இது கொரோனா பாதித்த ஆண்களின் விந்து செல்களில் வீக்கம் மற்றும் ஆக்சிஜனேற்ற அழுத்தம் அதிகரித்து காணப்பட்டுள்ளது. இந்த வேதியியல் ஏற்றத்தாழ்வு உடலில் உள்ள டி.என்.ஏ. மற்றும் புரதங்களை சேதப்படுத்தும்.
விந்தணுக்களில் ஏற்பட்டுள்ள இந்த விளைவுகள் அதன் தரம் மற்றும் கருவுறுதல் திறனுடன் தொடர்புடையவை. இது விந்தணு உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஆணின் இனப்பெருக்க அமைப்பானது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் பாதையாக கருதப்பட வேண்டும். இது ஆபத்தானது என்பதை உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட வேண்டும் என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்தி உள்ளனர்.