SuperTopAds

மெக்சிகோ ஜனாதிபதி லோபஸ் ஒப்ரடோருக்கு கொரோனா!! -பொறுப்பற்ற முறையில் கூட்டங்களை நடத்தியதால் தொற்று-

ஆசிரியர் - Editor II
மெக்சிகோ ஜனாதிபதி லோபஸ் ஒப்ரடோருக்கு கொரோனா!! -பொறுப்பற்ற முறையில் கூட்டங்களை நடத்தியதால் தொற்று-

மெக்சிகோ நாட்டின் ஜனாதிபதி லோபஸ் ஒப்ரடோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை பரிசோதனைகளின் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மெக்சிகோவில் கொரோனா வைரஸ் பரவலை அந்த நாட்டின் அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் முறையாக கையாளவில்லை என்கிற விமர்சனம் ஆரம்பம் முதலே இருந்து வருகிறது.

இதுவரை அங்கு சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அதேபோல் அங்கு கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 17 இலட்சத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது.‌

ஜனாதிபதி லோபஸ் ஒப்ரடோர் பொது நிகழ்வுகளில் பெரும்பாலும் முக கவசம் அணியாமல் கலந்து கொள்வது, கட்சிக் கூட்டங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அதிக அளவில் கூட்டத்தை சேர்ப்பது, அடிக்கடி பொது விமானங்களின் பயணிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று அவருக்கு வழக்கம் போல் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.