ஒரு ரொக்கட்டில் 143 செயற்கைக் கோள்கள்!! -விண்ணில் ஏவி அமெரிக்கா உலக சாதனை-
ஒரு ரொக்கட்டில் 143 அதிக திறன் கொண்ட சிறிய செயற்கைக்கோள்களை ஏவி அமெரிக்க நாட்டில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் தனியார் நிறுவனம் புதிய உலக சாதனை படைத்துள்ளது.
அந்நாட்டின் புளோரிடாவிலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கான் ரொக்கட் மூலம் நேற்று ஒரே தடவையில் 143 செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டன.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. சி-37 ரொக்கட் மூலம் 2017 ஆம் ஆண்டு 104 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பியதே இதுவரை உலக சாதனையாக இருந்த நிலையில் இப்போது அமெரிக்கா அந்தச் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
ரொக்கட்டில செலுத்தப்பட்டவற்றில் 10 செயற்கைக்கோள்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானவை. உலகம் முழுவதும் நேரடியாக செயற்கைக்கோள்களிலிருந்து அதிவேக இணைய சேவை வழங்கும் நோக்கத்தில் குறித்த நிறுவனம் இவற்றை அனுப்பியுள்ளது.