சூடானில் பழங்குடியினருக்கு இடையில் திடீர் மோதல்!! -வன்முறை சம்பவங்களில் சிக்கி 83 பேர் பலி-
சூடானில் வசிக்கும் பழங்குடியினர் இடையே திடீரென நடந்த மோதலில் 83 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டின் தார்பூர் நகரில் 13 ஆண்டு கால அமைதி காக்கும் திட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் அங்குள்ள ஆயுத படையினரை திரும்ப பெறுவது என முடிவானது. இது நடந்த 2 வாரங்களில் அந்நாட்டின் பழங்குடியினர் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.
அல் ஜெனீனா நகரில் மசாலித் என்ற பழங்குடியின குழுவினருக்கும் மற்றும் அராப் பழங்குடியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் போது ஏற்பட்ட வன்முறையில், வீடுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
இந்த வன்முறை சம்பவத்தில் பழங்குடியினரில் 83 பேர் கொல்லப்பட்டனர். இதில் சில ஆயுத படை அதிகாரிகள் உள்பட 160 பேர் காயமடைந்து உள்ளனர்.