10 கோடி பேருக்கு நச்சு ரசாயனம் கலந்த குடிநீர்!! -பல்கலைக்கழக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியானது-

ஆசிரியர் - Editor II
10 கோடி பேருக்கு நச்சு ரசாயனம் கலந்த குடிநீர்!! -பல்கலைக்கழக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியானது-

சீன நாட்டில் 10 கோடி பேருக்கு நச்சு ரசாயனம் கலந்த பாதுகாப்பற்ற குடிநீர் வினியோகிக்கப்படுகிறது என ஆய்வு அறிக்கை ஒன்றில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிங்குவா பல்கலை கழகத்தினை சேர்ந்த குழு ஒன்று மேற்கொண்ட ஆய்வில், துணிகள் மற்றும் பூச்சி கொல்லிகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட கூடிய மனிதர்களால் உருவாக்கப்பட்ட பாலிபுளூரோ அல்கைல்ஸ் (பி.எப்.ஏ.எஸ்.) என்ற ரசாயன பொருட்களின் பாதுகாப்பு அளவு பற்றி கணக்கிடப்பட்டது.

அவற்றில், 20 சதவீதத்திற்கும் கூடுதலான சீன நாட்டின் நகரங்களில் பாதுகாப்பு அளவை கடந்து இந்த வகை ரசாயன கலப்பு காணப்படுகிறது என தெரிய வந்துள்ளது.

அந்நாட்டின் வடக்கு பகுதியை விட கிழக்கு பகுதியில் இந்த வகை ரசாயன பொருட்களின் அடர்த்தி அதிகம் காணப்படுகிறது.  இதற்கு தீவிர தொழிற்சாலை நடவடிக்கைகள் மற்றும் அதிக மக்கள் தொகை நெருக்கம் ஆகியவை காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த ரசாயன பொருட்கள் மற்றவற்றை விட அதிக ஆபத்து நிறைந்தது.  பல்வேறு சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்த கூடியது


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு