நாவிதன்வெளி பிரதேச வறிய மக்களுக்கு நல்லிண மாமரங்கள் வழங்கும் நிகழ்வு
2020 - 21 ஆண்டிற்கான மனைப் பொருளாதாரத்தையும் போசனையும் மேம்படுத்தி குடும்ப அலகுகளை வலுவூட்டும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சாளம்பைக்கேணி -2 கிராம சேவகர் பிரிவில் உள்ள வறிய மக்களுக்கு நல்லிண மாமரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று(16) நடைபெற்றது.
நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதனின் வழிநடத்தலில் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எஸ்.சிவம் ஆலோசனையின் அடிப்படையில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவில் உள்ள 150 பயனாளிகளுக்கு கொரோனா சுகாதார நடைமுறைக்கமைய மாமரகன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தை சேர்ந்த பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பி.எஸ் அஸ்மா கிராம சேவகர் றிப்னா அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பௌஸர் ஆகியோர் இணைந்து பயனாளிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி வைத்தனர்.