அம்பாறை வெள்ள நீரினால் இதுவரை எதுவித உயிரிழப்பும் இல்லை
அடை மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள நீரால் பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கி உள்ளார்கள் எனவும் எதுவித இடைதங்கல் முகாமும் இதுவரை ஏற்பாடு செய்யப்படவில்லை என அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. முகம்மட் றியாஸ் தெரிவித்தார்.
தற்பொழுது கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் அடைமழை காரணமாக வெள்ள அபாயம் ஏற்படக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் சனிக்கிழமை(16) இது தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.
தற்போது அடைமழை அம்பாறை மாவட்டத்தில் பெய்து வருகின்றது.இது மொன்சூன் பருவப் பேற்று காலநிலையாகும்.கொவிட் 19 நோயின் தாக்கம் இருப்பதனால் இடைத்தங்கல் முகாம் ஏதுவும் இதுவரை அமைக்கவில்லை.வெள்ள நீரினால் பாதிக்கப்பட்ட மக்களில் சிலர் அவர்களது உறவுகளின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதுவரை எதுவித உயிரிழப்புகளோ பாதிப்புகளோ பெரிதாக இல்லை.வெள்ள நீரை வெளியேற்றுவதற்காக பிரதேச செயலகங்களுடன் அடிக்கடி தொடர்பை ஏற்படுத்தி தயார் நிலையில் கொரோனா அனர்த்த காலத்தில் செயற்பட்டு வருகின்றோம் என்றார்.