நிலநடுக்கத்தால் இடிந்து தரைமட்டமான வைத்தியசாலை!! -35 பேர் நசுங்கி பலி-

ஆசிரியர் - Editor II

இந்தோனேசியாவில் இன்று வெள்ளிக்கிழமை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மருத்துவமனை இடிந்து விழுந்ததில் 35 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கம் காரணமாக, அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. பொதுமக்கள் அவசரம் அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறினர். 

ஒரு வைத்தியசாலை கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. அதில் இருந்த நோயாளிகள், ஊழியர்களில் பலர் உள்ளே சிக்கிக்கொண்டனர். 

இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று கட்டிட இடிபாடுகளை அகற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கி சுமார் 35 பேர் உயிரிழந்திருப்பதாகவும், ஏராளமானோர் காயமடைந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு