கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 199வது கொடியேற்ற விழா ஆரம்பம்

ஆசிரியர் - Editor III
கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 199வது கொடியேற்ற விழா ஆரம்பம்

நானிலம் போற்றும் நாஹூர் நாயகம்  கருணைக் கடல்  குத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக   கல்முனை மாநகர மக்களால் வருடா வருடம் நடாத்தப்படும்  கடற்கரை பள்ளிவாசலில்  199 வது வருட புனித கொடியேற்று விழாவின் கொடி ஏற்றும் நிகழ்வு வரலாறு காணாதவகையில் 30 பேர் அளவில் மட்டும் அனுமதிக்கப்பட்டு மிக எளிமையான முறையில் இன்று (14) மாலை அஸர் தொழுகையை தொடர்ந்து மௌலீத் ஓதலுடன் ஏழு அடுக்கு மனோராவில் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

கல்முனை பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் டாக்டர் கே.எம்.ஏ. அஸீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர், கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். நிஸார் உட்பட நிர்வாகிகள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.

பிரதம மனோரா உட்பட 23 மனோராக்களில் 23 கொடிகள் ஏற்றப்பட்டு மௌலீத் மஜ்லிஸ் நடைபெற்றது. இவ்விழா இன்னும் 12 நாட்களுக்கு தொடர்ந்து இறுதிநாள் நிகழ்வன்று கந்தூரியுடன் நிறைவு பெற உள்ளது.

இராணுவம், பொலிஸாரின் பாதுகாப்புடனும், சுகாதார வைத்திய அதிகாரி காரியலய பொதுச் சுகாதார பரிசோதகர்களின் உயரிய சுகாதார வழிகாட்டலுடனும் இந்நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு