டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம்!! -துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் நிராகரிப்பு-

ஆசிரியர் - Editor II
டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம்!! -துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் நிராகரிப்பு-

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை துணை அதிபர் மைக் பென்ஸ் நிராகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனை அமெரிக்க காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜனவரி 6 ஆம் திகதி ஆயிரக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டு பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்பபை பதவி நீக்க கோரிக்கை வலுத்தது. இதற்காக பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சியினர் தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின் மீது இன்று புதன்கிழமை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும் டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை துணை அதிபர் மைக் பென்ஸ் நிராகரித்துள்ளார். பதவிநீக்கம் செய்வதற்கான 25 ஆவது திருத்தத்தை பயன்படுத்த அவர் மறுத்துவிட்டார். தனது முடிவை பாராளுமன்ற தலைவர் நான்சி பெலோசிக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு