அம்பாறையில் பொங்கல் பண்டிகை களையிழந்துள்ளது
அம்பாறை மாவட்டத்தில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை களையிழந்துள்ளதை காண கூடியதாக இருந்தது.
கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அடை மழை காரணமாக வெள்ளம் என்பன இப்பகுதி மக்களை பெரும் சிரமங்களுக்கு உள்ளாக்கியுள்ளன.
இதனால் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து சைவ ஆலயங்களிலும் மட்டுப்படுத்தமட்டில் பூஜை வழிபாடுகள் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாளை (14)ஆரம்பமாகவுள்ள குறித்த திருநாளை தற்போதைய சூழ்நிலையினால் பெருந்திரளான பக்தர்கள் ஆர்வமின்றி அன்றாட செயற்பாடுகளில் ஈடுபடுவதை அவதானிக்க முடிந்தது.
மேலும் இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை, பாண்டிருப்பு ,நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, காரைதீவு ,சம்மாந்துறை ,அக்கரைப்பற்று, பகுதிகளில் உள்ள தற்காலிக சந்தைகளில் கரும்பு தேங்காய் பொங்கல் பானை என்பன விற்பனை செய்யப்படுவதை காண முடிந்தது.