இரு கொரில்லா குரங்குகளுக்கு கொரோனோ!!

ஆசிரியர் - Editor II
இரு கொரில்லா குரங்குகளுக்கு கொரோனோ!!

அமெரிக்கா நாட்டில் உள்ள விலங்கு பூங்காவில் உள்ள 2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அமெரிக்காவில் அளவிலான கொரோனா பாதிப்புகள் காணப்படுகின்றன. இதனை முன்னிட்டு அந்நாட்டில் செயல்பட்டு வரும் விலங்கு பூங்காக்களை அரசு மூடியது.  

பொதுமக்களிடம் இருந்து விலங்குகளுக்கு கொரோனா பரவி விட கூடாது மற்றும் சுகாதார பாதிப்பு ஏற்பட்டு விட கூடாது என்று இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

கடந்த டிசம்பர் 6 ஆம் திகதி சான் டீகோ நகரில் உள்ள விலங்குகளுக்கான சபாரி பூங்கா பொதுமக்களின் வருகைக்கு தடை விதித்தது. இந்த பூங்காக்களில் கொரில்லாக்கள் வளர்க்கப்படுகின்றன.

இங்குள்ள 2 கொரில்லாக்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் இருமல் ஏற்பட்டு உள்ளது. இதனால் பூங்கா அதிகாரிகள் அவற்றின் மலக்கழிவு பொருட்களை பரிசோதனை மேற்கொண்டனர்.  

இதில் கடந்த 8 ஆம் திகதி வெளிவந்த முடிவில், அவற்றுக்கு வைரசால் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதனை அதிகாரிகளும் நேற்று உறுதி செய்துள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு