SuperTopAds

டிரம்பின் அனைத்து டுவிட்டர்களும் முழு முடக்கம்!! -நிர்வாகம் அதிரடி நடவடிக்கை-

ஆசிரியர் - Editor II
டிரம்பின் அனைத்து டுவிட்டர்களும் முழு முடக்கம்!! -நிர்வாகம் அதிரடி நடவடிக்கை-

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் தனிநபர், அதிகாரப்பூர்வ மற்றும் குழு  கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் அடுத்தடுத்து அதிரடியாக முடக்கியுள்ளது. 

டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறையால் 5 பேர் உயிரிழந்திருந்தனர். இதனிடையே தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய டிரம்ப் தான் பேசிய வீடியோக்களை டுவிட்டரில் பதிவேற்றம் செய்தார். அதேபோல், டிரம்பின் பேச்சு பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது.

இதனால் வன்முறையை தூண்டும் வகையில் இருந்த அந்த வீடியோக்களை டுவிட்டர், பேஸ்புக், யூடியூப் ஆகிய நிறுவனங்கள் தங்கள் பக்கங்களில் இருந்து அதிரடியாக நீக்கின.

இந்நிலையில், அதிபர் டிரம்பின் டுவிட்டர் பக்கம் நிரந்தரமாக முடக்கப்படும் என்றும் மேற்கொண்டு வன்முறை பரவாமல் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக டுவிட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால், டிரம்பின் டுவிட்டர் பக்கத்தை பின் தொடர்கின்ற 88 மில்லியன் பேர் அதிர்ச்சி அடைந்தனர்.

ஜனாதிபதி டிரம்பின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்ட சூழலில், அவர் தனது அதிகாரப்பூர்வ அமெரிக்க அரசு கணக்கில் இருந்து டுவிட்டர் பதிவுகளை வெளியிட தொடங்கினார். எனினும், ஒரு சில நிமிடங்களில் டிரம்பின் அதிகாரப்பூர்வ அரசு கணக்கான பாட்டஸ் கணக்கும் முடக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து குழு டிரம்ப் என்ற பெயரில் டிரம்பின் குழுவினர் மற்றொரு டுவிட்டை வெளியிட்டனர். எங்களை அமைதிப்படுத்த முடியாது. சுதந்திர பேச்சுக்கு டுவிட்டர் ஏற்றதில்லை என தெரிவித்தனர். இதனையடுத்து அந்த கணக்கும் முடக்கப்பட்டு உள்ளது.