உலகப் பணக்காரர்கள் தரவரிசையில் எலான் மாஸ்க் முதலிடத்தில்!! -அமேசான் நிறுவனர் ஜெப் பிசோசாவுக்கு 2 ஆம் இடம்-
உலகின் பணக்காரர்களின் தரவரிசையில் அமேசான் நிறுவனர் ஜெப் பிசோசாவை பின்தள்ளி அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவர் எலான் மஸ்க் முதலிடம் பிடித்துள்ளார்.
செவ்வாயில் மனிதர்களை குடியேற்றும் முயற்சி, மின்சக்தியில் இயங்கும் அதிவேக இலத்திரனியல் கார்கள் தயாரிப்பது முதல் பல்வேறு தொழிற்துறைகளில் எலான் மஸ்க் கொடிகட்டிப் பறந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக, உலக பணக்காரர்கள் வரிசையில் 2 ஆவது இடத்திலிருந்த எலான் மஸ்க் சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்து நேற்று 188.5 பில்லியன் டொலராக இருந்தது.
அமேசான் நிறுவனர் ஜெப் பிசோசாவின் சொத்து மதிப்பை விட இது 1.5 பில்லியன் டொலர் அதிகமாகும். இதனையடுத்து உலகப் பணக்காரர்கள் வரிசையில் எலான் மஸ்க் முதலிடம் பெற்றுள்ளார்.