SuperTopAds

டிரம்ப் ஆதரவாளர்களின் போராட்டத்தில் காயமடைந்த பொலிஸ் உயிரிழப்பு!!

ஆசிரியர் - Editor II
டிரம்ப் ஆதரவாளர்களின் போராட்டத்தில் காயமடைந்த பொலிஸ் உயிரிழப்பு!!

அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு நடத்திய திடீர் போராட்டத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

அந்நாட்டின் ஜனாதிபதியாக ஜோ பைடன் வரும் 20 ஆம் திகதி பதவியேற்க உள்ளதால் அவரது தேர்தல் வெற்றியை உறுதி செய்ததற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை நாடாளுமன்றம் மேற்கொண்டது.

இந்நிலையில், பைடன் அதிபராக தேர்வு செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நேற்று முன்தினம் பாராளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டிடத்தின் முன் டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கலைந்து போகும்படி கூறினர். இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அத்தமீறினர். இதனால் போராட்டக்காரர்களை கலைக்க அவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பெண் ஒருவர் உயிரிழந்து உள்ளார். இந்த சம்பவத்தில் மொத்தம் 2 பெண்கள் உள்பட 4 பேர் இதுவரை உயிரிழந்திருந்தனர். 

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முயன்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரும் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். 

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.