குடும்ப தகராறில் 15 வயதான சிறுவன் அடித்து கொலை..! சிறுவனின் மைத்துனர் கைது..
குடும்ப தகராறின்போது ஏற்பட்ட கைகலப்பில் 15 வயதான சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளான். குறித்த சிறுவனுக்கும் சிறுவனின் சகோதரிக்குமிடையில் ஏற்பட்ட கைகலப்பின்போது நடத்தப்பட்ட தாக்குதலில் சிறுவன் உயிரிழந்துள்ளான்.
அம்பாறை - அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் சிறுவனின் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே,
மாத்தறை வலஸ்முல்லை ஓமாரே பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த 13 வயதுடைய சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறுவனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கிடைத்த முறைப்பாட்டிற்கு இணங்க விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலஸ்முல்லை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.