SuperTopAds

இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்பர தெரிவித்த கருத்தினை மீள்பரிசீலனை செய்யவேண்டும்

ஆசிரியர் - Editor III
இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்பர தெரிவித்த கருத்தினை மீள்பரிசீலனை செய்யவேண்டும்

ஹிங்குரான சீனி தொழிற்சாலை குறித்து  சிறு – பெருந்தோட்டம் சார்ந்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்பர தெரிவித்த கருத்தினை மீள்பரிசீலனை செய்யவேண்டும் என அம்பாறை திகாமடுல்ல கல்லோயா திட்ட பௌத்த துறவிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

அம்பாறை மாவட்டம் ஹிங்குரான உத்தர ரஜ மகா விகாரை மண்டபத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பு இன்று(1) மாலை இடம்பெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

மேலும் இங்கு தெரிவிக்கப்பட்டதாவது

கல்லோயாத்திட்டத்தில் ஹிங்குரான  கடந்த காலங்களில் சீனி  தொழிற்சாலை திருப்திகரமான உற்பத்திகள் இடம்பெற்றிருந்தது.இலாபமீட்டும் நிறுவனமாக தொழிற்பட்ட இத்தொழிற்சாலையினால் சுற்றி இருந்த குடும்பத்தினர் தங்களது ஜீவனோபாயத்தை நடத்தி சென்றனர்.எனினும் இத்தொழிற்சாலை கடந்த அரசாங்கத்தின் காலத்தில் முடங்கிய நிலையில் சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.இவ்வாறு முடங்கி காணப்பட்ட இத்தொழிந்சாலையை தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜப்கஸ மீண்டும் சிறப்பாக இயங்குவதற்கு ஒரு குழுவினை நியமித்திருந்தார்.இக்குழுவானது கடந்த காலங்களில் சீரற்ற கைத்தொழில் மற்றும் தொழிற்சாலைகளை மீள இயக்கி புத்துணர்வுட்டும் நடவடிக்கை எடுப்பதற்காகும்.

 

சிறு – பெருந்தோட்டம் சார்ந்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்பர அம்பாறை பகுதி தரைதோற்ற அமைப்பினை விளங்கி கருத்துக்களை வெளியிட வேணடும்.தற்போது கந்தளாய் சீனி தொழிற்சாலை துருப்பிடித்துள்ள நிலை போன்று ஹிங்குரான சீனி தொழிற்சாலையின் நிலைமை  ஏற்படுத்த வழி செய்யாதீர்கள்.உங்களுக்கு எமது பிரதேசத்தை பற்றி விளக்கமின்மை இருப்பின் எமது பிரதேச  இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க   மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யு.டி வீரசிங்க ஆகியோரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.எமது பிரதேசத்தின் நிலைமை குறித்து தெளிவின்மையின் காரணமாகவே இவ்வாறு கருத்துக்களை தெரிவித்து இருப்பதாக நாம் கருதுகின்றோம்.

குறித்த சீனி தொழிற்சாலை குறித்து எமது அமைப்பு குரல் கொடுத்து வருகின்றது.கடந்த ஆட்சிக்காலங்களில் கூட தனியார் மயப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.இதனால் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.இவ்வாறான முடிவுகள் அனுபவம் இன்மையால் எடுக்கப்படுகின்றது என்பதே எமது கருத்தாகும்.

எனவே சிறு – பெருந்தோட்டம் சார்ந்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்பர அவர்களே கடந்த காலங்களில் இந்த தொழிற்சாலையை நம்பி வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதிப்படையும் வகையில் செயற்படாதீர்கள்.இவ்வாறு தாங்கள் தொழிற்சாலை குறித்து தெரிவித்த கருத்தினை எமது அமைப்பு வண்மையாக கண்டிக்கின்றது.

இவ்விடயத்தில் ஜனாதிபதி ,பிரதமர் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் ஊடாக தேசிய கைத்தொழில் கரும்பு பயிர்செய்கை குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.சிறு – பெருந்தோட்டம் சார்ந்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சரpன் கருத்து குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.கொரோனா வைரஸ் தற்போது உலகை ஆட்டிபடைத்துள்ள நிலையில் கைத்தொழில் பேட்டைகள் பல மூடப்பட்டு வருகின்றன.எனினும் தற்போது ஹிங்குரானா சீனி தொழிற்சாலையானது சீராக இயங்கி வருவதுடன் எந்த வித அரசியல் நலனுக்காகவும் இந்நடவடிக்கையை நாம் மேற்கொள்ளவில்லை என்பதுடன் எமது திகாமடுல்ல மக்களின் நலனுக்காக இத்தொழிற்சாலை குறித்து குரல் எழுப்பி வருவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.