விமான நிலையத்தில் பயங்கர தாக்குதல்;!! -26 பேர் பலி: 50ற்கு மேற்பட்டோர் காயம்-
ஏமன் நாட்டின் தெற்கே உள்ள ஏடன் விமான நிலையத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் குறித்த சம்பவத்தில் காயமடைந்த 50ற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹவுத்தி ஏவுகணைகள் தாக்கியதாக கூறப்படுகிறது. சவுதி அரேபியாவிலிருந்து புதிதாக உருவாக்கப்பட்ட சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஏமன் அரசாங்க அமைச்சர்கள் வந்த விமானம், ஏடனில் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே இந்த தாக்குதல் நடந்துள்ளது.
அமைச்சர்கள், மற்றும் அரசு உயர் அதிகாரிகள் விமானத்தில் வந்த போது இந்த தாக்குதல் நடைபெற்றது. அவர்கள் விமானத்திற்குள் திரும்பிச் சென்றுவிட்டதால் உயிர் தப்பினர்.
எனினும், பிரதமர் மயீன் அப்துல் மாலிக் மற்றும் ஏமனுக்கான சவுதி தூதர் மொகமத் சயீத் அல் ஜாபர் உட்பட அமைச்சரவை உறுப்பினர்கள் பாதுகாப்பாக நகரின் ஜனாதிபதி மாளிகைக்கு மாற்றப்பட்டனர்.
விமானத்தில் வந்த பயணிகள் பாதுகாப்பாக இருப்பதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. ராணுவத்தினர் விமான நிலையத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.