7.90 கோடி பேருக்கு கொரோனா!! -இரண்டாம் அலையால் உருக்குலையும் நாடுகள்-
உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் உயிர் கொல்லி கொரோனா வைரஸ் இதுவரை 7.90 கோடி பேரை தொற்றிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் முதல் கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2 ஆவது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர ஆட்டத்தை காட்டி வருகிறது.
இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 7,90,26,579 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 5,56,04,265 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 17 இலட்சத்து 36 ஆயிரத்து 535 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு தற்போது 2,16,85,779 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,06,547 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது
இதன்படி அமெரிக்காவில் கொரோனாவால் 1,89,10,829 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,34,129 பேர் உயிரிழந்துள்ளனர். 1,10,98,617 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் இந்தியாவில் 1,01,23,544 பேரும், பிரேசிலில் 73,66,677 பேரும், ரஸ்யாவில் 29,33,753 பேரும், பிரான்சிலில் 25,05,875 பேரும், இங்கிலாந்தில் 21,49,551 பேரும், துருக்கியில் 20,82,610 பேரும், இத்தாலியில் 19,91,278 பேரும், ஸ்பெயினில் 18,47,874 பேரும், ஜெர்மனியில் 15,87,908 பேரும், அர்ஜென்டினாவில் 15,63,865 பேரும், கொலம்பியாவில் 15,44,826 பேரும், மெக்சிகோவில் 13,38,426 பேரும், போலந்துதில் 12,26,883 பேரும், ஈரானில் 11,77,004 பேரும், பெருவில் 10,02,263 பேரும், உக்ரைனில் 9,89,642 பேரும், தென்னாப்பிரிக்காவில் 9,54,258 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.