விண்ணுக்கு பாய்ந்த 5 செயற்கை கோள்கள்!! -கொரோனாவுக்கு மத்தியில் சீனா அதிரடி-
உலகளவில் நாள்தோறும் கொரோனா பரவல் அச்சம் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில், சீனா 5 செயற்கை கோள்களை விண்ணுக்கு செலுத்தியுள்ளது.
உலக நாடுகள் அச்சம் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் சீனாவிலேயே முதலில் கண்டறியப்பட்டது.
எனினும் சீனா கொரோனா பரவலை கட்டுப்படுத்தியுள்ளதுடன் அதன் ஏனைய நடவடிக்கைகளிலிருந்தும் வீழ்ச்சியை சந்திக்காது பல முயற்சிகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றது.
‘லாங்க் மார்ச் 8’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய செயற்கை கோள் 4.5 டொன் சுமையை சுமக்கும் திறன் கொண்டதாகும்.
சீன விண்வெளி ஆய்வு மையம் நேற்று ஹைனான் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து புதிய ‘லாங்க் மார்ச் 8’ ராக்கெட் மூலம் 5 செயற்கைகோள்களை விண்ணிற்கு செலுத்தியது.
இதன் மூலம் புதிய செயற்கை கோள்கள் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதோடு, 5 செயற்கைகோள்களும் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக சீன விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது