படுகொலைகள் செய்தவர்களுக்கு பொது மன்னிப்பு!! -டொனல்ட் டரம்ப் அதிரடி நடவடிக்கை-
அமெரிக்காவில் 2016 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஸ்யாவின் தலையீடு இருந்ததாக கூறப்படுகின்றமை குறித்த விசாரணையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 2 பேருக்கு அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.
அவர்கள் இருவரும் இந்த விடயம் குறித்த விசாரணையில் அமெரிக்காவின் எஃப்.பி.ஐக்கு உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்கியமை உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், அவர்கள் உட்பட 15 பேருக்கு ட்ரம்ப் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.
அவர்களில் 4 பேர் ஈராக்கில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற படுகொலைகளுடன் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.