காட்சியகத்தில் சத்தியராஜுக்கு மெழுகு சிலை!!

ஆசிரியர் - Admin
காட்சியகத்தில் சத்தியராஜுக்கு மெழுகு சிலை!!

உலகப்புகழ் பெற்ற லண்டன் மேடம் டுசாட்ஸ் மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில் நடிகர் சத்யராஜின் சிலையும் வைக்கப்படவுள்ளது.

தமிழ்த் திரைப்பட நடிகரான சத்யராஜ் தனது நடிப்பின் மூலம் இந்திய ரசிகர்களை ஈர்த்தவர். நேர்மையான கதாபாத்திரம், வில்லன், குணசித்திர கதாபாத்திரம் என அனைத்துப் பாணியிலும் தமிழ் சினிமாவை மிரட்டியர்.

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ், ரானா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் என சினிமா பட்டாளமே நடித்து அதிக பொருள்செலவில் மிகப் பிரமாண்டமாக உருவான திரைப்படம் பாகுபலி. இது இரு பாகங்களாக வெளியானது. இந்தப் படத்தைக் கண்டு மிரளாதவர்களே கிடையாது என்னும் அளவுக்கு இந்தப் படத்தின் திரைக்கதையும் கதாபாத்திரங்களும் அமைந்திருக்கும்.

இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரம் மற்றும் திருப்புனையை ஏற்படுத்துவதுமாக இருப்பது கட்டப்பா கதாபாத்திரம் தான். இதை, சத்யராஜ் ஏற்று நடித்திருந்தார். இப்படத்தில் இவரின் நடிப்பைக் கண்டு இவருக்கு இந்திய அளவில் மிகப் பெரிய பெயர் கிடைத்தது.

இந்தப் பெருமை தற்போது உலகளவில் இடம்பெற உள்ளது. சத்யராஜின் கட்டப்பா கதாபாத்திரம், லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில் வைக்கப்படவுள்ளது.

இந்த அருங்காட்சிகத்துக்குச் செல்லும் முதல் தமிழரின் சிலை சத்யராஜின் சிலை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு மூலம் நடிகர் சத்தியராஜுக்குத் திரைத் துறையில் இருந்தும் அவரின் ரசிகர்களிடமிருந்தும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு