இரண்டாவது கொரோனா தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கிய அமெரிக்கா!!
அமெரிக்கா நாட்டு மக்களுக்கு செலுத்துவதற்காக இரண்டாவது கொரோனா தடுப்பூசிக்கும் அனுமதியளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே அங்கு பைசர் மற்றும் பயோ என் டெக் நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது அமெரிக்க நிறுவனமான மொடெர்னாவினால் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசியும் பாதுகாப்பானது என்று, அந்தநாட்டின் உணவு மற்றும் மருந்துப்பொருள் நிர்வாகத்துறைக்கு ஆலோசனை வழங்குகின்ற நிபுணர்கள் குழு அறிவித்துள்ளது.
இந்தநிலையில் அவசர பயன்பாட்டுக்காக மொர்டெனாவின் தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்படும் நிலைமை இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தடுப்பூசி 94 சதவீதம் பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் 3 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.